திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (12:43 IST)

உயர்கிறது திருப்பதி லட்டு விலை..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவின் விலை உயர்ந்துள்ளது.

திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு அனுதினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு லட்டு பிரசாதமாக தரப்படுகிறது.

நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு எப்போதும் ஒரு லட்டு இலவசமாக தரப்பட்டு வருகிறது. மேலும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்படும். இதனால் ரூ.200 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த இழப்பை சரிகட்ட வருகிற வைகுண்ட ஏகாதசி முதல் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாகவும், அதற்கு மேல் தேவைப்படுபவர்களுக்கு ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்கவும் திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.