குடியரசு தின அணிவகுப்பு; மேற்கு வங்கத்துக்கு அனுமதி மறுப்பு
குடியரசு தினத்தன்று நடக்கவிருக்கும் அணிவகுப்பில் மேற்கு வங்க மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் யூனியன் பிரதேசங்கள் உட்பட 56 அலங்கார ஊர்திகள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் மாநிலங்கள் சார்பில் 16 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகள் என, மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் மேற்கு வங்க அலங்கார ஊர்தியில் அமைந்த காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், மத்திய அரசு திட்டமிட்டு அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.