அஜித் பவாரை நம்பி கெட்டோம்... ஏமாற்றதில் ஃபட்நாவிஸ்
அஜித்பவாரை நம்பி ஆட்சி அமைத்தோம். அஜித்பவார் ராஜினாமா செய்ததால், எங்களிடம் மெஜாரிட்டி இல்லை தேவேந்திர ஃபட்நாவிஸ் பேட்டி.
மஹாராஷ்டிராவில் நிலவிவந்த அரசியல் குழப்ப சூழலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராகவும் , தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதனை தொடர்ந்து பாஜகவின் வெற்றிக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநர் தனது பதவியை தவறுதலாக பயன்படுத்துகிறார் என வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தேவேந்திர ஃபட்நாவிஸும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தேவேந்திர ஃபட்நாவிஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவின் எண்ணிக்கை குறைந்த பிறகு சிவசேனா பேரம் பேச தொடங்கியது. மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவு பாஜகவுக்கு இடங்கள் இல்லை என தெரிந்த பின்பு தான் சிவசேனா முதல்வர் பதவி கேட்டது.
அஜித்பவாரை நம்பி ஆட்சி அமைத்தோம். அஜித்பவார் ராஜினாமா செய்ததால், எங்களிடம் மெஜாரிட்டி இல்லை. எனவே நானும் ராஜினாமா செய்துள்லேன். மஹாராஷ்டிராவில் நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை ஃபாட்னாவிஸ் ராஜினாமா செய்ததால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது. சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என தெரிகிறது. உத்தவ் தாக்ரே முதல்வராவர் என தெரிகிறது.