ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (14:07 IST)

சபாஷ் சரியான தீர்ப்பு! – மகாராஷ்டிரா குறித்து ஸ்டாலின் ட்வீட்!

மகாராஷ்டிரா தேர்தல் வழக்கு குறித்து நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க திட்டமிட்டு வந்த வேளையில் திடீரென பாஜக ஆளுனர் மாளிகையில் பதவியேற்றது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பான்மை பெற்றவர்கள் நாங்கள் இருக்க பாஜகவுக்கு எப்படி ஆட்சியமைக்க வாய்ப்பு தரலாம் என கோபம் கொண்ட சிவசேனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதுகுறித்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் நாளை மாலை 5 மணிக்கும் முதல்வர் பொறுப்பேற்ற தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பானமையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் ” மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.