செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (17:06 IST)

சிவசேனா என்ன அதிமுகவா? கொக்கரிக்கும் தொண்டர்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் பாஜக கிழிக்கும் கோட்டைத் தாண்டாமல் அதிமுக செயல்பட்டு வருவதாகவும் பாஜகவின் அனைத்து திட்டங்களுக்கும் தலையாட்டி ஆதரவு தருவதாகவும், பாஜகவை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்காமல் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், உண்மையில் பாஜக அரசுதான் நிழல் ஆட்சியாக தமிழகத்தில் இருந்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர் 
 
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த சிவசேனாவும் அதேபோல் பாஜகவிற்கு தலையாட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பாஜகவை சிவசேனா ஆட்டுவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி, 10க்கும் மேற்பட்ட அமைச்சர் பதவி என அதிகமாக பாஜகவிடம் டிமாண்ட் செய்ததால் கூட்டணி உடைந்தது.  இந்த நிலையில் தற்போது பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்துவிட்டது
 
இந்த நிலையில் சிவசேனா ஆதரவாளர் ஒருவர் ’சிவசேனாவை அதிமுக போல் தலையாட்டும் என பாஜக நினைத்து விட்டதா? நாங்கள் சொல்வதைத்தான் பாஜக கேட்க வேண்டும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது