புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (17:46 IST)

மணிப்பூரில் மீண்டும் பதட்டம்: 2 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு..!

Manipur
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்களுக்கு இடையே கலவரம் நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் இரண்டு வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கடந்த மே மாதம் கலவரத்தால் பற்றி எரிந்த மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இரவு 10 மணியளவில்  அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அப்பகுதியில் இருந்த இரண்டு வீடுகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva