செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (18:15 IST)

மணிப்பூர் வீரர்களின் லட்சியம் வெல்லட்டும் - அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin
பல நெருக்கடிகளுக்கு இடையே தமிழ்நாடு வந்து பயிற்சி பெற்று திரும்பும் மணிப்பூர் வீரர்களின் லட்சியம் வெல்லட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’நம் மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் மேற்கொள்ள  அழைப்பு விடுத்திருந்தார்கள்.

அதனையேற்று கடந்த மாதம் 13-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து 17 வீரர்- வீராங்கனையர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விமான டிக்கெட், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பயற்சி அளிக்கப்பட்டது.

தற்போது ஒரு மாத பயிற்சி முடிவுற்ற நிலையில், மணிப்பூர் வீரர்- வீராங்கனையருடன் இன்று கலந்துரையாடினோம். இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாட்டின் அன்பிற்கு அவ்வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

பல நெருக்கடிகளுக்கு இடையே தமிழ்நாடு வந்து பயிற்சி பெற்று திரும்பும் மணிப்பூர் வீரர்களின் லட்சியம் வெல்லட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.