1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மே 2024 (13:58 IST)

12ஆம் வகுப்பை அடுத்து சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் சற்றுமுன் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதை அடுத்து மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகின்றனர். 
 
இன்று மதியம் 12 மணிக்கு சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சற்றுமுன் 10ஆம் வகுப்புகள் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நாடு முழுவதும் இந்த தேர்வில் 93.60 இந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
 
சிபிஎஸ்இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த முறை சிறப்பாகப் படித்து, முழு நம்பிக்கையுடன் தேர்வெழுதி வெற்றி பெறவும், இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 
 
பாரதத்தின் வருங்காலச் சிற்பிகளான மாணவர்கள் அனைவருக்கும், மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும்.
 
Edited by Siva