1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (18:27 IST)

ஆதித்யா எல் 1’ பயண காலம் எத்தனை நாட்கள்? என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சமீபத்தில் சந்திராயன் 3 என்ற விண்கலம் அனுப்பப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் அனுப்பப்பட உள்ளது. 
 
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலத்தின் பயண நாள் 100 நாட்கள் என்றும் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தூரம் இந்த விண்கலம் பயணம் செய்யும் என்று கூறப்படுகிறது. 
 
சூரியன் மேல் வளிமண்டல இயக்கவியல் பற்றிய ஆய்வு செய்யும் இந்த விண்கலம் சூரியன் வெப்பத்தை வெளியிடும் இயக்கவியல் குறித்தும் ஆய்வு செய்யும். மேலும் சூரியனின் காந்தப்புலம் மற்றும் அதன் அளவீடுகள் உள்ளிட்ட பல ஆய்வுகளையும் இந்த விண்கலம் மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran