வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:13 IST)

இந்திய செஸ் தரவரிசை தமிழக வீரர் முதலிடம்!

Chess Cookies
இந்திய செஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழக வீரர் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய செஸ் தரவரிசைப் பட்டியலில்  நம்பர் வீரராக இருந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 37 ஆண்டுகளாகப் பட்டியலில் நம்பர் 1 ஆக இருந்த  நிலையில் அவரது சாதனை முடிவுக்கு வந்தது.   

ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழகத்தை சேர்ந்த மற்றொரு குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 17 வயதே ஆன குகேஷ் 2758  புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 9 வது இடமும், இந்திய அளவில் 2 வது இடத்திற்கு முன்னேறினார். சமீபத்தில் உலக கோப்பை செஸ்  தொடரில்  2 வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா 19 வது இடத்திலுள்ளார்.