தொடர்புடைய செய்திகள்
- வரும் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? ரஜினியின் அண்ணன் பதில்
- விக்ரம் லேண்டரை படம் பிடித்த பிரக்யான் ரோவர் ! வைரலாகும் போட்டோ
- இந்தியாவின் முன்னேற்றம் உலகளவில் நமது வலிமையின் அடையாளம் - பிரதமர் மோடி
- ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோள் ஒத்திகை, சோதனை பணிகள் நிறைவு: இஸ்ரோ தகவல்..!
- ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
நிலவில் பிளாஸ்மாவை கண்டறிந்த விக்ரம் லேண்டர்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை அடுத்து விண்வெளியில் விண்கலத்தை தரையிரங்கிய 4 வது நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
விக்ரம் லேண்ரில் இருந்து கீழிறங்கிய பிரக்யான் ரோவர் நிலவின் பல ஆய்வுகள் மேற்கொண்டு, தனிமங்களை கண்டறிந்து வருகிறது.
அதன்படி, நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை ஏற்கனவே சந்திராயன் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ள நிலையில் இன்று பிரக்யான் ரோவரில் உள்ள மற்றொரு கருவியும் நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது.
இதுபற்றி இஸ்ரோ தன் சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில் நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 31, 2023
In-situ Scientific Experiments
Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere - Langmuir Probe (RAMBHA-LP) payload onboard Chandrayaan-3 Lander has made first-ever measurements of the near-surface Lunar plasma environment over the… pic.twitter.com/n8ifIEr83h
அடுத்த கட்டுரையில்
