வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2024 (13:21 IST)

நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு.! நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய புகாரில் நடவடிக்கை..!

Nagarguna
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் இருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடித்து தள்ளப்பட்டது.
 
தெலுங்கானா மாநிலம்  தும்மிடிகுண்டா அருகே ஏரி நிலத்தை ஆக்கிரமித்து பிரபல நடிகர் நாகார்ஜுனா பிரமாண்ட கட்டடம் கட்டி இருப்பது தெரிய வந்தது.

இந்த அரங்கில் தான், 2015-ல் தற்போதைய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண வரவேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகள் நடந்தன.
 
மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014-ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று காலை இடித்து அகற்றியது.


பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அரங்கின் 35 சதவீத கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.