வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (11:38 IST)

14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. குளத்தில் பிணமாக குற்றம் சாட்டப்பட்ட நபர்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் பிரதான குற்றவாளி என்று சந்தேகப்படும் நபர் குளத்தில் குதித்து உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அசாம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் 14 வயது சிறுமி மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார், சிறுமி மாலை நேர வகுப்பு பயிற்சிக்கு சென்று விட்டு தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மூன்று நபர்கள் கொண்ட கும்பல் அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்துக்கு பிறகு சிறுமியை சாலையோரம் அந்த கும்பல் வீசி சென்றுள்ள நிலையில் மயங்கி நிலையில் இருந்த சிறுமி மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் இந்த சம்பவத்தின் முதல் குற்றவாளியாக தபாசுல் இஸ்லாம் என்ற நபர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணைக்காக குற்றவாளியை போலீசார் அழைத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக தபாசுல் இஸ்லாம் குளத்தில் குதித்து விட்டார். பல மணி நேரம் அவரை தேடிய நிலையில் தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran