செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2024 (13:10 IST)

எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் திமுகவை அசைக்க முடியாது.! விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி பேச்சு.!!

Minister Ragupathi
விஜய் உட்பட எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கினாலும் திமுகவை  யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விஜய் உட்பட எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,  திமுக என்ற பழம்பெரும் கட்சியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்
 
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என்று அவர் கூறினார்.


கிருஷ்ணகிரி வழக்கில் கைதான சிவராமன் மருத்துவமனையிலும், அவருடைய தந்தை விபத்திலும் உயிரிழந்தனர் என்று அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.