1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (10:30 IST)

நீட் தோல்வி - டெல்லி மாணவர் 8 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்ற வருடம் நீட் தேர்வில் தோல்வியடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
 
அதேபோல் இந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில், அலைக்கழிக்கப்பட்ட தமிழகத்தை சார்ந்த 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த பிரணவர் மகேந்திரதா என்ற மாணவர், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாத விரக்தியில் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மாணவனின் பெற்றோர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.