திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (13:43 IST)

கர்ப்பிணி பெண்ணை 2 நாட்களாக கை-கால்களை கட்டி வைத்து கொடுமை.....

5 மாத கர்ப்பிணி பெண்ணை இருட்டு அறையில் 2 நாட்களாக கட்டி வைத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
புதுடெல்லியில் வசித்து வந்த ஒரு பெண்ணை அவரின் கணவரும், மாமியாரும் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் அப்பெண்ணை இருட்டு அறையில் கை,கால்களை  கட்டி வைத்து சிறை வைத்தனர். அதன் பின் அப்பெண்ணின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, உங்கள் மகளை காணவில்லை, எங்கோ ஓடிவிட்டாள் எனக் கூறியுள்ளனர்.
 
எனவே, அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில், அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூற, போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் அவரை அடைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும், அவரின் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதோடு, தலைமறைவான அப்பெண்ணின் கணவரையும் தேடி வருகின்றனர்.