திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (08:30 IST)

நீட் தேர்வில் தோல்வி - விழுப்புரம் மாணவி விஷம் குடித்து தற்கொலை

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். அதில் தமிழகத்தில் 1.15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அவர்களை அலைக்கழித்ததில், 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். 
 
நேற்று வெளியான நீட் தேர்வின் முடிவுகளில், பீகாரைச் சேர்ந்த கல்பனா குமார் என்ற மாணவி 720 மதிப்பெண்ணிற்கு 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.  தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண் எடுத்து 12ம் இடத்தை பிடித்தார்.
தமிழகத்தை சேர்ந்த 1,14,606 மாணவ - மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். அதில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 60 சதவீத மாணவ மாணவிகளால் தேர்ச்சி பெற முடியவில்லை.
 
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது தொடர்கதையாகி வருகிறது.