1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (13:36 IST)

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். அதில் தமிழகத்தில் 1.02 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அவர்களை அலைக்கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில்  நீட் தேர்வு முடிவுகள், ஜுன் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு  நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மனித வள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரூப் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால் ஒன்றரை மணி நேரம் முன்னதாக 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.