1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A metro train between tamil nadu and karnataka

தமிழ்நாடு - கர்நாடகா இடையே மெட்ரோ ரயில்.. முதல்முறையாக இரு மாநிலங்களை இணைக்கும் சேவை..!

தமிழ்நாடு
இந்தியாவிலேயே முதல்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 
 
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் ஆகிய நகரங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் அமையும் 20.5 கிலோமீட்டர் தூரத்தில் 11.7 கிலோமீட்டர் தூரம் கர்நாடகாவிலும் 8.8 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் இந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை; பரபரப்பு தகவல்..!