ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (16:36 IST)

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய  அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
இன்று நாடாளுமன்றத்தில் தெலுங்கானா எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் இந்த பதிலை கூறினார். 
 
கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது என்றும் அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு தான் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran