1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (20:49 IST)

தமிழகத்தில் எந்த நெட்வொர்க் நிறுவனம் முதலிடம் தெரியுமா?

network
மக்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட   நெட்வொர்க்  நிறுவனம்  பற்றிய   தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நெட்வொர்க்காக ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

இன்றைய சூழலில் அனைத்து டெலி நிறுவனங்களும் கடும் போட்டியுடன், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க சலுகை அறிவித்து  வருகின்றனர்.

இந்த நிலையில்  இன்று மக்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் அதிக வாடிக்கையாளார்கள் கொண்ட நெட்வொர்க்காக  2,74,98,627 கோடி  வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது.

2,29,59,673  கோடி வாடிக்கையாளார்களுடன் ஜியோ 2 வது இடத்தில் உள்ளது.

1,61,01,995 கோடி வாடிக்கையாளார்களுடன் வோடபோன் / ஐடியா   3வது இடத்தில் உள்ளது.
92,06,084 கோடி வாடிக்கையாளர்களுடன் பிஎஸ்என்எல்  4 வது இடத்தில் உள்ளது.