புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (10:20 IST)

ராணுவ வீரர் என நினைத்து டிரைவரை கற்கலால் அடித்து கொன்ற கும்பல்..

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய்ப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பல பகுதிகளில் பாதுகாப்புக்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஒரு டிரக் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் அந்த டிரக்கை ராணுவ வாகனம் என நினைத்து கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த தக்குதலில் டிரக் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த டிரக் டிரைவரின் பெயர் நூர் முகமது என விசாரணையில் தெரியவந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளது.