வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (08:48 IST)

மக்களை நசுக்குவதுதான் உங்கள் தேசியமா??..பாஜக மீது பாயும் பிரியங்கா

தேசியம் என்ற பெயரில் மக்களை நசுக்கிறார்கள் என காங்கிரஸைச் சேர்ந்த பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து காஷ்மீர் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தலைமையில் காஷ்மீருக்கு சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் ராகுல் காந்தி விமானத்தில் பயணித்தபோது காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் தான் சந்தித்து வரும் பிரச்சனைகளை ராகுல் காந்தியிடம் கூறினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”எத்தனை நாட்கள் இந்த கொடுமை தொடரப்போகிறது??.தேசியம் என்ற பெயரில் இது போன்று பல அப்பாவி மக்கள் நசுக்கப்பட்டுவருகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காஷ்மீரின் ஜனநாயக உரிமையை பறித்ததை விடவும் பெரிய தேச விரோத செயல் எதுவும் இல்லை எனவும் பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே, சமீபத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என காங்கிரஸார் சிலர் குற்றம் சாட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.