காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மீது பாஜக பிரமுகர் பரபரப்பு புகார்...

bjp
anandakumar| Last Modified ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (18:11 IST)
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மீது அவரது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியின் அனுமதி பெற்று டெல்லி அலுவலகத்தினை முற்றுகையிடுவோம் என்றும் கரூரில் பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீது கரூர் நகர காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார். ஆர்எஸ்எஸ் சங்கபரிவார அமைப்புகள் மற்றும் பாஜகவினர் மீது அவதூறு பரப்புவதாக புகார் மனு.

கடந்த 21 மற்றும் 22 தேதிகளில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் ஜோதிமணி செண்ணிமலை என்ற அதிகாரப்பூர்வ தன்னுடைய பெயரில் உள்ள டிவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்களில் ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவார அமைப்புகள், மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளையும் அவதூராக பதிவு செய்துள்ளதாக கூறி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் பாஜகவினர் 30க்கும் மேற்ப்பட்டவர்கள் இன்று கரூர் நகர காவல் நிலையத்தில் ஜோதிமணி மீது புகார் மனு அளித்தனர். அவர்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

 

 இதில் மேலும் படிக்கவும் :