செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (14:26 IST)

பேர் கிரில்ஸ் உடன் உரையாடியது எப்படி ? பிரதமர் மோடி விளக்கம் !

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக  மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று ஃபிட்னஸ் இந்தியா இயக்கம் தொடங்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், மக்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி மன் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்பொழுது அவர் கூறியதாவது ; மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட நாடு தயாராகிவருகிறது. காந்தியின் வாழ்க்கையும் சேவையும் பிரிக்க முடியாத ஒன்றே என்றார்.
 
காந்தியின் பிறந்தநாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுத்து நாட்டுக்கு சேவை ஆற்றுவதன் மூலம் காந்திக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்த முடியும் என்றார்.
 
இதையடுத்து, தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட்  29 ஆம் தேதி அன்று பிட்னஸ் இந்தியா இயக்கம் தொடங்கப்படவுள்ளதாக அறிவித்தார். அதில் அனைவரும் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார். 
 
மேலும் , பேர் கிரில்ஸ் உடன் ஒரு தனியார் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஹிந்தியில் பேசியதை, அவர் எப்படி புரிந்துகொண்டார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர் என்பதைச் சுட்டி காட்டி அதற்கு பதிலளித்தார்.
 
அதவாது ,ஹிந்தியில் உள்வாங்கும் வார்த்தைகளை மொழி பெயர்த்துச் சொல்லும் கருவி பேர் கிரில்ஸின் காதில் பொருத்தப்பட்டிருந்தது. அதைக் கொண்டே அவர் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.