சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்; கேரளாக்கு அடுத்து பஞ்சாப்பிலும் நிறைவேற்றம்
கேரளாவை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஆகியவை பேரணி நடத்தினர்.
இதனிடையே கேரளாவின் பினராயி விஜயன் தலைமையிலான அரசால், சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமரிந்தர் சிங் தலைமையிலான அரசால், சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.