செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 16 ஜனவரி 2020 (17:36 IST)

”திருவள்ளுவர் நாளில் அந்த மகானை வணங்குகிறேன்”.. தமிழில் டிவிட் செய்த மோடி

திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார்.

திருவள்ளுவர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு தமிழிலேயே டிவிட்  செய்துள்ளார்.

அதில், ”திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கிய படைப்புகளும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட நம்மை ஊக்குவிக்கின்றன” கூறியுள்ளார்.