1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (10:09 IST)

முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மோசடி வழக்கு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர், ஓப்பனிங் பந்துவீச்சாளர் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என ஆல்ரவுண்டராக விளையாடியவர். 39 டெஸ்ட் போட்டிகளிலும் 130 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய இவர் மீது கடந்த 1999ஆம் ஆண்டு சூதாட்டப்புகார் எழுந்ததை அடுத்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகினார்
 
இந்த நிலையில் தற்போது டெல்லியில் வசித்து வரும் மனோஜ் பிரபாகர் மீது  டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
 
டெல்லியில் உள்ள சர்வப்ரியா விஹார்  என்றா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வரும் மனோஜ் பிரபாகர் அதே குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் உள்ள வீடு ஒன்றின் பூட்டை உடைத்து அத்துமீறி வீட்டினுள் நுழைந்தது மட்டுமின்றி அந்த வீட்டில் தனது நண்பரை மனோஜ் பிரபாகர் தங்க வைத்துள்ளதாக தெரிகிறது
 
இதுகுறித்து தற்போது லண்டனில் இருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரரான சந்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில் மனோஜ் பிரபாகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது