1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (12:07 IST)

தோனிக்கு எண்ட் கார்ட்...? கங்குலி பேட்டி!!

பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து விரைவில் செய்தி வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். 
 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை அதோடு தனது ஓய்வு குறித்தும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தோனி குறித்து புதிதாக பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலில் பேசியுள்ளார். 
 
கங்குலி பேசியதாவது, வரும் 24 ஆம் தேதி நான் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுகுழுவினரை சந்திக்க உள்ளேன். அப்போது அவர்கள் தோனியின் நிலை குறித்து எடுத்துள்ள முடிவை தெரிந்துக்கொள்வேன். அதன் பின்னர்தான் தோனியின் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். 
மேலும் தோனியின் விருப்பதை அறியவும் அவருடன் பேச உள்ளேன் என தெரிவித்துள்ளார். என்னத்தான் கங்குலி பேசுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், இந்தியா - பங்களாதேஷ் இடையேயான டி20 தொடரிலும் தோனிக்கு அணியில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.