செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (08:35 IST)

கோபத்தால் காயமடைந்த தென்னாப்பிரிக்கா வீரர்: நாடு திரும்பிய சோகம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்று உள்ள நிலையில் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாளை முதல் ராஞ்சியில் தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் இருந்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் மார்க்கம் திடீரென விலகியுள்ளார். இந்த தொடரில் மார்க்கம் சரியாக விளையாடவில்லை என்பதும் முதல் டெஸ்ட் போட்டியில் 5 மற்றும் 35 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரன் ஏதும் எடுக்காத ஆத்திரத்தில் பெவிலியனில் இருந்து அறைக்கு திரும்பிய மார்க்கம், ஒரு பொருளின் மீது தனது கையை கோபமாக குத்தியதாகவும், இதன் காரணமாக அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது 
 
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து விளையாடும் தகுதியை இழந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து மார்க்கம் வேறு வழியின்றி தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பிவிட்டார். அவருக்கு பதிலாக வேறு வீரர்கள் நியமிக்கப்படுவாரா? என்பது நாளைய போட்டியினோது தெரியவரும்