1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. a case against magistrate in rajasthan

வாக்குமூலம் பெறும் போது ஆடையை கழற்ற சொன்ன மாஜிஸ்திரேட்: வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

வாக்குமூலம்
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறும்போது அநாகரீகமாக நடந்து கொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பட்டியல் இன பெண் காவல்துறையில்  புகார் அளித்த நிலையில் இந்த புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

அப்போது அந்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கும்போது மாஜிஸ்திரேட்  ஆடையை கழட்ட கூறியதாகவும் காயங்களை பார்க்க வேண்டும் என்றால் ஆடையை கழற்றி தான் ஆக வேண்டும் என்று அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது

இதையடுத்து அந்த பெண் மாஜிஸ்திரேட் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள நிலையில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
புதுச்சேரியில் பாஜக வெற்றி பெற்றால் ரங்கசாமி அரசு கவிழ்ந்துவிடும்: எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை