திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (17:12 IST)

புதுச்சேரியில் பாஜக வெற்றி பெற்றால் ரங்கசாமி அரசு கவிழ்ந்துவிடும்: எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை

புதுச்சேரியில் பாஜக வெற்றி பெற்றால் முதல்வர் ரங்கசாமி அரசு கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் வைத்தியலிங்கம் போட்டியிடும் நிலையில் அவருக்கு வாக்கு சேகரித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசிய போது ’புதுச்சேரியில் மத்திய அரசு ரேஷன் கடைகளை  மூடி விட்டதாகவும் ஏழை எளிய மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்

இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி தான் என்று கூறிய அவர் ரேஷன் கடைகளை திறப்பதற்கு ரங்கசாமி அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்

மேலும் புதுச்சேரியில் பாஜக வெற்றி பெற்றால் முதல்வர் ரங்கசாமி ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் பாஜகவுக்கு அது ஒன்றும் புதிது கிடையாது என்றும் பல மாநிலங்களில் அவர்கள் கூட்டணி கட்சியின் ஆட்சியை தான் கலைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்த கட்சியை துண்டு துண்டாக ஆக்கிவிட்டதாக கூறிய அவர் இந்தியாவை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்

Edited by Mahendran