1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (14:29 IST)

ஜாதி வெறியின் உச்சகட்டம் : பலூனைத் தொட்டதால் 12 வயது சிறுவன் அடித்துக் கொலை

தீண்டாமையின் உச்சகட்டமாக 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் திருவிழாவில் பலூனைத் தொட்டதால் அவன் அநியாயமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீண்டாமை சம்மந்தமாக பிரச்சனைகள் வடமாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த கொடுமையால் பலர் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில மிருகங்கள் மாறாமல் தான் இருக்கின்றனர்.
 
ஆக்ராவில் அலிகாரிலுள்ள நட்ரோயி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பலூனை தொட்டுள்ளான்.
 
இதனால் அங்கிருந்த இளைஞர்கள் சிலர், நீ கீழ் ஜாதியை சேர்ந்தவன். நீயெல்லாம் பலூன் மீது கை வைக்கலாமா? என கூறியவாறே சிறுவனை கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அந்த சிறுவன் படுகாயமடைந்தான்.
 
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான். ஜாதி வெறி பிடித்த சில மிருகங்கள் ஒரு அப்பாவி சிறுவனை அடித்தே கொன்றுள்ளனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு சிறுவனை கொலை செய்த கிறுக்கன்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.