செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (11:17 IST)

சுந்தரம் கூறிய அந்த வார்த்தை.. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் : அபிராமி புலம்பல்

தனது கள்ளக்காதலன் கூறியதாலேயே குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்போது அனைத்தையும் இழந்து நிற்கிறேன் என சிறையில் அபிராமி புலம்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீஸார் அபிராமி, அவளது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். 
 
சிறையில் முதலில் சக பெண் கைதிகளிடம் முகம் கொடுத்த பேசாமால் அழுது கொண்டே இருந்த அபிராமி தற்போது ஒரிரு வார்த்தை பேச துவங்கியுள்ளாராம். அதேபோல், ‘குழந்தையை ஏன் கொன்றாய்?’ பலரும் கேட்பதால் பதில் கூற முடியாமல், தன்னை தனிமை சிறையில் அடைக்குமாறு சிறை அதிகாரிகளிடம் அவர் புலம்பியதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.
 
அதோடு, சுந்தரத்தின் மீது ஏற்பட்ட காதல், அடக்க முடியாத காம உணர்ச்சி ஆகியற்றால் இந்த தவறை செய்து விட்டேன். சுந்தரம் கூறியதாலேயே என் கணவர் மற்றும் குழந்தைகளை கொல்ல முடிவெடுத்தேன். தற்போது, குழந்தைகள், பெற்றோர்கள், கணவர் என யாருடைய ஆதரவும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் என அழுதபடி புலம்பிக்கொண்டே இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.