திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:02 IST)

பாரதிராஜா எடுத்தது தவறான முடிவு – கருணாஸ் கருத்து!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில் வாக்களித்த கருணாஸ் தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் வாக்களித்த தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் ‘தமிழ் சினிமா தற்போது பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கு உண்டு. பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பித்தது தவறான முடிவு. தவறை சரிசெய்யாமல் அதில் இருந்து தப்பிக்கும் முடிவே அது.’ எனக் கூறியுள்ளார்.