வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:32 IST)

அரை டிக்கெட்டில் முழு படம்: தியேட்டரில் கொரோனா கால தள்ளுபடி

அரை டிக்கெட்டில் முழு படம்: தியேட்டரில் கொரோனா கால தள்ளுபடி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில்தான் நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் புதிய திரைப்படங்கள் ம்ற்றும் மாஸ் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவராததால் தியேட்டர்களில் கூட்டம் வரவில்லை
 
50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே பார்வையாளர்கள் வந்து கொண்டிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பல திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க தியேட்டர் அதிபர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிறப்பு தள்ளுபடியாக ஒரு தியேட்டரில் பாதி டிக்கெட்டில் முழு படத்தையும் காண்பிக்க முடிவு செய்துள்ளனர்
 
என் பெயர் ஆனந்தன் என்ற படத்தை பார்க்க அந்த தியேட்டருக்கு வரும் பார்வையாளர்கள் அவர்கள் கொடுத்துள்ள ஈமெயிலுக்கு படத்தின் டிக்கெட் புகைப்படம் எடுத்து அனுப்பினால் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு ஜிபே மூலம் பாதி கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த சலுகை நவம்பர் 21 முதல் டிசம்பர் 3 வரை அளிக்கப்படும் என்றும் ஒரு டிக்கெட்டுக்கு ஒருமுறை மட்டுமே பணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்புக்குப் பின்னராவது தியேட்டரில் கூட்டம் அதிகமாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்