74 வது சுதந்திர தினச் சிறப்புக் கவிதை ...

poem
சினோஜ்| Last Modified வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:31 IST)

74 வது சுதந்திர தின சிறப்புக் கவிதை


அறிவியல் உலகை ஆளும் நாடுகளுக்குப்
போட்டியாய்,
அறிவுப்புரட்சியில்
ஆகிருதியாகி அறுபத்தாறு கோடி
இளைஞர் படையைக்
கொண்டு பீனிஸாக எழுந்து

அந்த
‘வல்லரசை’ நிஜம் காணக்
கலாம்
சொன்னதுபோலக் கனவு காணும் நாடு ! நம் இந்தியா!
பொருளாதாரச் சோதனைகளைத் தவிடுபொடியாக்கி...
விஞ்ஞான ஆராய்ச்சியில் மகுடம் சூட்டி !சொந்த
மங்கல்யான் விண்கலத்தைச் செவ்வாய்க்குத் தூதுவிட்ட
நாடு நம் இந்தியா.

தத்துவ ஆசான் புத்தர், அகிம்ஷை தீரர் மகாவீரர்,
எளிமையின் உருவம் தேசத்தந்தை காந்தி,
அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்த அம்பேத்கார், நவீன
இந்தியாவைக் கண்டறிந்த நேரு, விண்ணுக்கு ராக்கெட்டை ஏவிய அப்துல்கலாம்,
ஆசியாவில் முதல் நோபல் வென்ற தாகூர், விடுதலைக்கனலைக் .
கவிதையில் வார்த்த பாரதீ...
சாதியை அகற்ற அரும்பாடுபட்ட பெரியார் ,..
இத்துணை முன்னோடிகளைப்போல
வளரும் புது அறிவு இந்தியாவைக் கட்டமைக்கப் போகிறோம்
நாங்களாகிய இளைஞர்கள்!

- சினோஜ்

இதில் மேலும் படிக்கவும் :