2026 புத்தாண்டின் முக்கிய நிதி மாற்றங்கள்: ஒரு பார்வை
2026 ஜனவரி 1 முதல் இந்திய நிதித்துறையில் ஐந்து முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
பான்-ஆதார் இணைப்பு: நேற்றுடன் காலக்கெடு முடிந்த நிலையில், இணைக்கப்படாத பான் கார்டுகள் இன்று முதல் செயலிழக்கின்றன. இதனால் வங்கி பரிவர்த்தனை மற்றும் வரி ரீஃபண்ட் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
8-வது ஊதியக் குழு: இன்று முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் அமலாகின்றன. இது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பெரும் உயர்வை அளிக்கும்.
வாராந்திர கிரெடிட் ஸ்கோர்: சிபில் போன்ற மதிப்பெண்கள் இனி 15 நாட்களுக்கு பதிலாக ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும். இதனால் கடன் தவணைகளை தவறவிட்டால் அது உடனடியாகப் பிரதிபலிக்கும்.
புதிய ITR படிவங்கள்: முன்கூட்டியே விவரங்கள் நிரப்பப்பட்ட எளிமையான வருமான வரி படிவங்கள் அறிமுகமாகியுள்ளன. இது வரி தாக்கல் செய்யும் நேரத்தை குறைக்கும்.
சிலிண்டர் விலை: சர்வதேச சந்தை நிலவரப்படி வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை110 ரூபாய் உயர்ந்து ரூ.1849.50 என விற்பனை செய்யப்படும்.
Edited by Siva