1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (19:53 IST)

சொர்க்கத்திற்கு செல்ல கூட்டாக தற்கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வினோத வழிபாட்டில் ஈடுபட்டு பின்னர் சொர்க்கத்திற்கு செல்ல கூட்டாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் உள்ள புரராரி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கூட்டாக தற்கொலை செய்யப்பட்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும் ஒரே ஒரு முதிய பெண் மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
 
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அந்த வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. வயதான ஒருவர் மட்டும் படுக்கையிலும் மற்றவர்கள் தூக்கில் தொங்க வேண்டும் என்றும் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்கொலை செய்து கொண்ட அனைவரும் ஒரே விதமான ஆடையை அணிந்து கொண்டது மட்டுமின்றி அவர்கள் அனைவரின் கை, கண், வாய் ஆகியவை கட்டப்பட்டும் இருந்தது. 
 
தற்கொலை செய்தது கொண்ட அனைவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய டெல்லி போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்