வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (17:17 IST)

10ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் திடீர் மாயம்: தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை!

police
பத்தாம் வகுப்பு மாணவிகள் 4 பேர் திடீரென மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் என்ற இடத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் திடீரென மாயமாகி உள்ளனர்
 
4 மாணவிகளும் பள்ளியில் இருந்து திரும்பவில்லை என்பதால் அவர்களது பெற்றோர் பள்ளியில் சென்று விசாரித்தபோது அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று தெரியவந்தது 
 
இதனை அடுத்து எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் காவல்துறையில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் தங்களை யாரும் தேட வேண்டாம் என்றும் நல்ல நிலைமைக்கு திரும்பிய பிறகு நாங்களே வீட்டுக்கு வருவோம் என்றும் 4 மாணவிகளும் கூட்டாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva