புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (12:52 IST)

மீன் சந்தைக்கு சென்றதால் குமட்டல் - மீனவர்களை இழிவுபடுத்திய சசிதரூர் !

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் மீனவர்களைப் பற்றி இழிவாகப் பேசியதால் அவருக்கு எதிராக கண்டனங்கள வைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் மத்திய அமைச்சருமான சசிதரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். மீண்டும் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இது சம்மந்தமாக பிரச்சாரத்திற்காக திருவனந்தபுரம் பகுதியில் உள்ள மீன் சந்தை ஒன்றிற்கு சென்று அங்குள்ள மீன் வியாபாரிகளை சந்தித்து பேசினார்.

இது சம்மந்தமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய போது ’மீன் சந்தைக்கு சென்றபோது குமட்டல் ஏற்பட்டாலும், அங்கு உற்சாகமான மனநிலையைக் காண முடிந்தது’ என பதிவிட்டிருந்தார். சசிதரூரீன் இந்த பதிவு மீனவர்களை இழிவுபடுத்திவிட்டதாகவும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

சசிதரூருக்கு எதிராக மீனவர்கள் கேரளா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கேரளா வெள்ளத்தின் போது பெருவாரியான மக்களைக் காப்பாற்றியது மீனவர்கள் தான். ஆனால் சசிதரூரின் இந்த பேச்சு அவர்களை அவமதிப்பதாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.