வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (11:30 IST)

’இரு தொகுதிகளில்’ போட்டியிடும் ராகுல் காந்தி : ’ காங்கிரஸ் தொண்டகள் குஷி ’

வரும் மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் வரும் மக்களவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்று அக்கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :
 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் இரண்டாவதாக  கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர்  போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக ஏ.கே அந்தோணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.