வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (10:17 IST)

பிரதமர் மோடி படம்: ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு நோட்டீஸ்

கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு செய்த அடுத்த நிமிடத்தில் இருந்தே தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. இருப்பினும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அரசுத்துறைகளில் பிரதமரின் படங்களை பயன்படுத்தி வந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். 
 
குறிப்பாக 'நானும் காவலாளி' என்ற வாசகம் கொண்ட டீ கப்கள் ரயில் நிலையங்களில் உள்ள டீஸ்டால்களில் தரப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுக்களும் பயணிகளுக்கு தரப்படுகிறது. இதேபோல் விமான போக்குவரத்திலும் பிரதமரின் படம் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து ரயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுக்கள் தரப்படுவது குறித்து உடனடியாக பதிலளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் நேரத்தில் பிரதமரின் 'மிஷன் சக்தி' சர்ச்சைக்குரிய விஷயமாக மாறிய நிலையில் தற்போது ரயில்வே, விமான அமைச்சகங்களும் சர்ச்சையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது