ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (19:47 IST)

மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம்: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல்

கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எந்த அளவுக்கு மோடி அலை நாடு முழுவதும் இருந்ததோ, அந்த அளவுக்கு 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடிக்கு எதிரான அலை நாடு முழுவதும் இருந்து வருகிறது
 
மேலும் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று பல பிரபலங்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில்  இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு மர்ம நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு வந்த மர்ம கடிதத்தில் 'மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டப்படும் வகையிலான வார்த்தைகள் உள்ளது. இந்த கடிதம் ஜெய்ஷ்-இ -முகமது அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதால் இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.