1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (10:53 IST)

பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்-2024 திரை விமர்சனம்!

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் 'பேட் பாய்ஸ்' பட வரிசையில் நான்காவது பாகமான  'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)' படத்தின் தொடர்ச்சியாகும்.
 
ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), 'பேட் பாய்ஸ் 2 (2023)' படத்திற்கு வழி வகுத்தது (2003).
இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை அடில் மற்றும் பிலால் ஆகியோர்கள் இயக்கியுள்ளனர்.
 
இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள்  இயக்கியுள்ளனர்.
 
உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய 'பேட் பாய்ஸ்' திரைப்படம் ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பவும் ஒரு சுவாரசியமான திருப்பத்துடன். மியாமியின் மிகச் சிறந்த டிடெக்ட்டிவ்ஸ் கதையம்சத்துடன்  உருவாகியுள்ளது.
 
துப்பறியும் நிபுணர்கள்  மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி  காவல் துறைக்குள் நடக்கும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர்.
 
மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று  கருதி விசாரணை நடைபெறும் போது, துப்பறியும்  நிபுணர்கள்  துரத்தப்படுபவர்களாக மாறுவதால்,வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை
 
இத் திரைப்படம் தமிழ், ஆங்கிலம்,தெலுங்கு,
ஹிந்தி,ஆகிய மொழிகளிலும் ஐ மேக்சிலும் ஜூன் 6.(2024)
தேதி அன்று சோனி பிக்சர்ஸ் என்டேர்டைன்மென்ட் இந்தியா இப்படத்தை இந்தியாவில் வெளியிடுகிறது.