வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Modified: சனி, 4 மே 2024 (10:11 IST)

அரண்மனை 4 திரை விமர்சனம்!

ஏசிஎஸ் அருண் குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் தயாரித்து சுந்தர்.சி இயக்கத்தில்  வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4
 
இத் திரைப்படத்தில் நாயகனாக சுந்தர் சி மற்றும்
யோகிபாபு,தமன்னா,விடிவி கணேஷ்,ராமச்சந்திர ராஜு, டெல்லி கணேஷ், கோவை சரளா,
சேசு,ராஷி கண்ணா, உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
வழக்குரைஞராக சரவணன்(சுந்தர்.சி) தன் அத்தை(கோவை சரளா)ஆகிய இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்
 
காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னை விட்டுப் பிரிந்து போன தங்கை செல்வி (தமன்னா), அவரது  கணவர் (சந்தோஷ் பிரதாப்) இருவரும் இறந்து விட்டதாகச் செய்தி வர, அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்குச் செல்கிறார் தனது அத்தையுடன்
 
இன்னொரு பக்கம் நிலத்திலும் நீரிலும் வாழும் 'பாக்' என்ற அமானுஷ்ய தீயசக்தியானது பிரம்மபுத்திரா நதிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக 'பாக்' நதியிலிருந்து தப்பித்து விடுகிறது.
 
இருவரின் மரணத்திலும் ஏதோ  மர்மம் இருப்பதாக  உணரும் சரவணன் அதை ஆராய முற்படும் போது அடுத்தாக  தங்கையின் குழந்தைகளுக்கு ஆபத்திருப்பதை தெரிந்து கொள்கிறார்.
 
இதை தொடர்ந்து தொடர்ந்து காவல்துறை அதிகாரி மற்றும் ஊர் தலைவரின் மகன் என தொடர்  மரணங்கள் நிகழ்கிறது.
 
இந்த தொடர் மரணங்களுக்கு என்ன காரணம்? யார் காரணம்?பாக்' என்ற அமானுஷ்ய சக்திக்கு இக் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? குழந்தைகளை சரவணன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தன்  அரண்மனை 4 படத்தின்  மீதி கதை .
 
நல்ல அமானுஷ்ய சக்தி,தீய அமானுஷ்ய சக்தி, மர்ம மரணங்கள், பாசப் போராட்டங்கள், என  காமெடி கலந்து   திகில்  படமாக உருவாக்கி உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
 
ஆக்‌ஷன்,செண்டி மெண்ட் என இயல்பாக தனது அனுபவ நடிப்பை அளவில்லாமல் கொடுத்துள்ளார் சுந்தர்.சி, 
 
தாய் பாசத்தைப் உணர்வு பூர்வமாக காட்டும் தாயாகவும்,திகில்  பேயாகவும் கனமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் தமன்னா. 
 
நாயகி தமன்னாவின் கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் நடிப்பு ஓகே.
 
இ.கிருஷ்ணசாமி யின் ஒளிப்பதிவில் இரவு நேர திகில் காட்சிகளை திகிலாக படம் பிடித்து காட்டியுள்ளார் தனது கேமரா கண்களால் .
 
ஹிப் ஹாப் ஆதியின் இசையும் படத்தின் பின்னணி இசையும்  படத்திற்கு உயிரோட்டம்.
 
மொத்தத்தில்  கோடைகால கொண்டாட்டத்திற்கு குடும்பத்துடன் செல்ல வேண்டிய இடம் "அரண்மனை 4"