வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (12:26 IST)

வாரத்தின் முதல் நாளில் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

share
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே இன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 234 புள்ளிகளும் உயர்ந்து 82596 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 25,294 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தையும் பேங்க் பீஸ், கோல்ட் பீஸ், மணப்புரம் கோல்டு, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்தாலும் புதிதாக முதலீடு செய்பவர்கள் பங்குச்சந்தை நிபுணர்களிடம் தகுந்த ஆலோசனை வெற்றி முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva