ஹிண்டன்பர்க் குறிவைத்த இன்னொரு நிறுவனம்.. ஒரே நாளில் 9% வீழ்ச்சி அடைந்த பங்குகள் விலை..!
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் அதானி நிறுவனம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தன. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில நாட்களில் பங்குகள் மீண்டும் உயர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிறுவனம் குறித்து ஆய்வு செய்து அந்த நிறுவனத்தில் தவறு நடந்தால் அதை அறிக்கையாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை ஷார்ட் செய்து வைத்து அறிக்கை வெளியிட்டவுடன் பங்குகள் குறைந்த உடன் அதிக லாபம் பார்த்து வருகிறது.
அதானி நிறுவனத்தை இரண்டு முறை குறிவைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது அமெரிக்காவில் உள்ள சூப்பர் மைக்ரோ என்ற நிறுவனத்தை குறி வைத்துள்ளது. ஏஐ சம்பந்தப்பட்ட நிறுவனமான சூப்பர் மைக்ரோ நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறிய நிலையில் நேற்று ஒரே நாளில் இந்நிறுவனத்தின் பங்குகள் ஒன்பது சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva