தொடர்புடைய செய்திகள்
- முடங்கியது 'X' தளம்: உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு!
- 'X' தளத்தில் இனி வீடியோ லிங்குகளை காப்பி செய்ய முடியாதா? சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி
- டிரம்ப் - மோடி தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க் கலந்து கொண்டாரா? என்ன காரணம்?
- தேர்தலில் தனித்து நின்றால் த.வெ.க எத்தனை % வாக்குகளைப் பெறும்? எலான் மஸ்க்கின் Grok கணிப்பு..!
- 700 பில்லியன் டாலர் சொத்து: உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் இடம் வெல்டராக வேலை பார்த்தவர் இன்று கோடீஸ்வரர்.. இந்த மேஜிக் எப்படி நடந்தது?
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் பங்குச்சந்தையில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்ததை தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். நாஸ்டாக் சந்தையில் ஏற்பட்ட இந்த மாபெரும் எழுச்சி, சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியமைத்துள்ளது.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றிய ஜுவான் ஹெர்னாண்டஸ் என்ற தொழிலாளி தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வெறும் சாதாரண ஒப்பந்த தொழிலாக நினைத்து ஸ்பேஸ்எக்ஸில் இணைந்த இவருக்கு, ஆரம்பத்தில் சுமார் 10,000 டாலர் மதிப்பிலான பங்குகள் வழங்கப்பட்டன. நிறுவனம் அடைந்த அசுர வளர்ச்சியால், தற்போது இவரிடம் 6,500 பங்குகள் உள்ளன. பங்குச்சந்தை அறிமுகத்திற்குப் பிறகு ஒரு பங்கின் விலை 160.95 டாலராக உயர்ந்ததை அடுத்து, இவரது பங்குகளின் மதிப்பு சுமார் 9.95 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த வரலாற்று சாதனை ஐபிஓ மதிப்பு 75 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. ஊழியர்களுக்கு பங்குகளை வழங்கும் நடைமுறை தொழிலாளர்கள் மத்தியில் நிறுவனத்தின் மீதான பொறுப்புணர்வை அதிகரிப்பதாக ஹெர்னாண்டஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இவ்வளவு பணம் கிடைத்த பிறகும் தனது வேலையை நிறுத்த விரும்பாத அவர், தனது குழந்தைகளுக்கு பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் குறித்து கற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த மாபெரும் வர்த்தக வெற்றி, நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
Edited by Siva
