தொடர்புடைய செய்திகள்
- ரெட் ஜெயண்ட்ல்ல இருந்து மாசத்துக்கு 4 படம் வருமே.. இந்த மாசம் ஏன் வரல்ல.. ஏன்னா இது தவெக ஆட்சி: ஆதவ் அர்ஜூனா
- விஜய் பத்தி கேட்டா ‘நோ கமெண்ட்ஸ்’.. தவெகவினரை கோபப்படுத்திய லதா ரஜினிகாந்த்..
- தவெக ஆட்சி.. ஆனா திமுக சிஸ்டம்!.. விஜய் முன்னால் இருக்கும் சவால்!...
- ஊழல் பெரும் அளவில் குறைஞ்சிருக்கு.. ஆனால் அதிகாரிகள் இன்னும் மாறவில்லை: அன்புமணி
- என்ன செய்யப்போகிறது சிங்கப்பெண் அதிரடிப்படை?.. இன்று விஜய் துவங்கி வைக்கிறார்!..
புதிய விடியலை நோக்கி சுழலும் விஜய் அரசு: அரசியல் விமர்சகர் பெருமாள் மணி பாராட்டு!
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம், முழு அமைச்சரவையும் பொறுப்பேற்று வெறும் 10 வேலை நாட்கள் தான் ஆகிறது. ஆனால், அதற்குள்ளாகவே தமிழக வெற்றிக் கழக அரசு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது. "வாழ்த்துகள் திரு. விஜய்! நீங்கள் தான் புதிய விடியல் மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய நம்பிக்கை" என அரசியல் விமர்சகர் பெருமாள் மணி மனதார வாழ்த்தியுள்ளார்.
ஊழல் ஒழிப்பு, அரசு பணியிட மாற்றங்களில் கொண்டு வரப்பட்டுள்ள வெளிப்படைத்தன்மை ஆகியவை இந்த குறுகிய காலத்தில் சாத்தியமாகியுள்ளன. அதுமட்டுமின்றி, DTCP அப்ரூவல் முதல் சுற்றுச்சூழல் சான்றிதழ் வரை அனைத்து நேர்மையான அரசு சேவைகளும் மக்களுக்கு எளிதாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு பொது மருத்துவமனைகள் முதல் பத்திரப்பதிவுத்துறை வரை அனைத்திலும் தர உயர்வு செய்யப்பட்டு, விஜய் அரசு தற்பொழுது ஒரு சூறாவளியாய் சுழன்று வேலை செய்து வருகிறது.
முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிகமாக மேடைகளில் பேசுவதில்லை, ஆனால் நிறைய மாற்றங்களை நேரடியாகத் தனது செயலில் காட்டுகிறார். 'சொல் அல்ல செயலே தவெக அரசு' என்பதை இந்த 10 நாட்களிலேயே அவர் நிரூபித்து காட்டியுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளதாக பெருமாள் மணி சுட்டிக்காட்டியுள்ளார்.
Edited by Siva
